ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் – தபால் துறை அறிவிப்பு

நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது.

தபால் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் கடந்த ஜூலை 14ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

இதில் வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தபால் துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் தமிழில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டன.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தபால் துறை தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.

Related Posts