ரபேல் ஒப்பந்தத்தில் முறை கேடு நடந்துள்ளதாக கூறி தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ரபேல் ஒப்பந்தத்தில் முறை கேடு நடந்துள்ளதாக கூறி தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வந்தது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த நவம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது இதில் ரபேல் ஒப்பந்தத்தில் செயல்முறை மற்றும் நடைமுறைகளை சந்தேகிப்பதற்கிடமான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெறும் அனுமானத்தால் புகார் கூறுவதால் எந்த பயனும் இல்லை என்றும் கூறிய நீதிபதிகள் ரபேல் விமானத்திற்கான விலையை தீவிரமாக பரிசீலித்தோம் என்றும், இதில் முறை கேடு எதுவும் நடைபெற வில்லை என்றும் கூறினர். 5-ம் தலைமுறைக்கான போர் விமானங்கள் இந்திய ராணுவத்திற்கு அவசியம் என்று கூறிய நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Posts