ரபேல் ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ்

ரபேல் ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ்தான், என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் இரண்டாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 2016ல் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது, பாகிஸ்தான் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 4 முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரபேல் விமான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ்தான் எனவும்,. ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியிலும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சபரிமலை தீர்ப்பு குறித்து தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு  வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு மட்டுமே ராணுவ ஹெலிகாப்டரை வழங்கவில்லை எனவும், அவசர உதவி என யார் கேட்டாலும் உதவி வழங்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

Related Posts