ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரபேல் விமான பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அண்மையில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் தங்களுக்கு தேவையான நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ள ஒப்பந்த விதிகள் அனுமதிப்பதாக  விளக்கம் அளித்திருந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு உள்ளது எனவும், பழிவாங்கும் எண்ணத்தில் ராகுல் காந்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது எனவும், ஒப்பந்தப்படி ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் எனவும் அருண்ஜெட்லி கூறினார்.

Related Posts