ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி விதிகளை மீறி சலுகை அளித்துள்ளார்

ரஃபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு வரும் பிரபல ஆங்கில நாளேடுதற்போது புதிய  ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. டஸ்ஸால்ட் மற்றும் எம்.பி.டி.ஏ. என்ற பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்செட் எனப்படும் உள்ளூர் ஒப்பந்ததாரர் நியமனத்திற்காக எப்போதும் இல்லாத அளவிற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது  என்பது அந்த நாளேட்டின் புகாராகும். .சுமார்  60 ஆயிரம்  கோடி ரூபாய் மதிப்பிலானரஃபேல் கொள்முதல் ஒப்பந்தத்திற்காக தளவாட கொள்முதல் விதிமுறையில் 2 முக்கிய ஷரத்துகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாளேடு கூறியுள்ளது. இதன்படி  வரம்பு மீறி செல்வாக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு விதிக்கப்படும் அபராத முறை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கொள்முதல் பேரக்குழுவின் முயற்சியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நீர்த்துப்போக செய்தார் என்று அந்த நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

Related Posts