ரபேல் போர் விமான வழக்கில், சீராய்வு மனுக்களை ஆய்வு செய்யக்கூடாது: மத்திய அரசு கோரிக்கை: உச்சநீதிமண்றம் மறுப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களைஉச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும்,  ரபேல் ஒப்பந்தத்தில் தவறு ஏதும் நடைபெறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.  அந்த தீர்ப்பை எதிர்த்துமுன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களுடன்,ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்களும்இணைக்கப்பட்டு இருந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீராய்வு  மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட மத்திய அரசின்தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால்  தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பின்னர் சீராய்வு மனுக்களுக்குஎதிராக மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரபேல் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதால், தேச பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள்,சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றனர். சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு ஏற்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த ஆவணங்கள் மீது விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் கூறிய  நீதிபதிகள்  விசாரணை தொடங்கும் தேதியை விரைவில் அறிவிப்பதாக கூறினர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts