ரபேல் விமான ஒப்பந்தத்தின்போது தான் பதவியில் இல்லை

Want create site? Find Free WordPress Themes and plugins.

ரபேல் விமான ஒப்பந்தத்தின்போது தான் பதவியில் இல்லை என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் விளக்கமளித்துள்ளார்.

பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதனை பாஜக அரசு மறுத்துள்ளது. இதனிடையே, ரபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார். அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், இடைவேளையின் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் ஏற்ப்பட்டது எனவும், ஒப்பந்தம் போடப்பட்டப்போது தான் அதிபர் பதவியில் இல்லை எனவும் கூறினார். மேலும், இதுகுறித்து வேறு எதுவும் தம்மால் கூற முடியாது எனவும், மிக தெளிவான சட்ட திட்டங்களுடன் பிரான்ஸ் அரசு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts