ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதி

டெல்லி:

ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

 டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என உறுதிபடத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில்  பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்துள்ளது எனவும், . ரபேல் விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.  பிரான்ஸ் அரசுக்கும் அனில் அம்பானிக்கும் இடையே பிரதமர் மோடி தரகராக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி,  ராணுவ ரகசியத்தை காக்க வேண்டிய பிரதமர் அதனை தனிநபரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.  ரபேல் விவகாரம் தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை பயனற்றது என்ற அவர்,  மோடியின்கணக்கு தணிக்கையாளர் சவுக்கிதார் தான் சி.ஏ.ஜி. அறிக்கையை தயாரித்துள்ளதாக தெரிவித்தார்.  நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையில் பிரதமர் மோடி சமரசம் செய்துவிட்டார் எனவும், தமது குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

Related Posts