ரபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடி தலையீடு : ராகுல் குற்றச்சாட்டு

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், . ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர்,  “ ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளதாகவும்,  ரபேல் மோசடியில் பிரதமர் மோடி தவறு செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய்களை கூறுகிறார் எனவும், பிரதமர் மோடியினாலே, அனில் அம்பானியை தான் தேர்வு செய்ததாக பிரான்சு முன்னாள் அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். மனோகர் பாரிக்கரை தான் சந்தித்தபோது ரபேல் குறித்து எதுவும் பேசவில்லை என்ற ராகுல். உடல் நலன் குறித்து மட்டுமே அவரிடம் விசாரித்ததாகவும் தெரிவித்தார். .பிரதமர் மோடி 30ஆயிரம் கோடி ரூபாயை விமானப்படையிடம் இருந்து  கொள்ளையடித்து அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார் எனவும்,  இதைத் தான் கடந்த ஓராண்டாக எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். . தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் அளித்த அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி தனியாக பேசி உள்ளார் என  கூறப்பட்டுள்ளது எனவும்,  ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்துள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.

Related Posts