ரமலானை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசியை உடனடியாக வழங்க  தமிழக  தேர்தல் அதிகாரியிடம் மனு 

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் அரசு திட்டடங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.  இந்நிலையில் ஆண்டுதோறும் புனித ரமலான் மாதத்தில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சி வழங்க தமிழக அரசு இலவச அரிசி வழங்குவது வழக்கம்

இந்நிலையில் மே மாதம் 5ஆம் தேதி நோன்பு தொடங்கும் நிலையில், இஸ்லாமிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிவாசல்களுக்கும்   இலவச அரிசி வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம்  தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது

Related Posts