ரமாணியை தொடர்ந்து அகில் குரேஷி ராஜினாமா

தஹில் ரமாணியை தொடர்ந்து, திரிபுராவுக்கு மாற்றப்பட்ட நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் அகில் குரேஷியை, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் கடந்த மே மாதம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்க மறுத்த மத்திய சட்டத்துறை அமைச்சகம், வேறு நபரை பரிந்துரைக்குமாறு கூறியது. அமைச்சகத்தின் கடிதங்களை ஆய்வு செய்த கொலிஜியம், நீதிபதி அகில் குரேஷியை திரிபுரா மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில் குரேஷி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார்.

Related Posts