ரயிலில் அடிபட்டு காயமடைந்த யானை கிச்சை பலனின்றி உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் ரயிலில் அடிபட்டு, பலத்த காயமடைந்த  யானை கிச்சை பலனின்றி உயிரிழந்தது

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் வனப்பகுதி வழியே சென்று கொண்டிருந்த ரயில் மோதியதில், தண்டவாளத்தைக் கடந்த யானை பலத்த காயமடைந்தது.  ரத்தக் காயங்களுடன் மரங்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்த யானையை ரயில் பயணிகளும், அப்பகுதிவாசிகளும் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இது காண்போரை கண்கலங்கச் செய்தது.  வனத்துறையினர் அடிபட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த யானை நேற்று மாலை உயிரிழந்தது. ரயில் மோதிய வேகத்தில் உள்காயம் அதிகம் ஏற்பட்டதால் யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

 

Related Posts