ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மேலும் அனைத்து ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் முழுவதுமாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், முக்கிய ரயில் நிலைங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts