ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராடப்போவதாக எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணய்யா தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எஸ்.ஆ.எம்.யூ சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணய்யா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராடப்போவதாக தெரிவித்தார். மேலும், 55 வயதானோர் அல்லது 30 வருட பணிநிறைவு பெற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். இதே போக்கை மத்திய அரசு தொடர்ந்தால் பல்வேறு கட்ட போராட்டங்களை சந்திக்க நேரிடும் என அவர் எச்ச்ரிக்கை விடுத்தார்.

Related Posts