சென்னை சென்ட்ரல் யில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.பெயர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்திடவும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லியில் பிரதமர் மோடியை, தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்தார். அவர்களது சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுதல், சேலத்தின் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கட்டமைப்பது தொடர்பான கோரிக்கைகளும் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழக மக்களை பாதிக்க செய்யும் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கமாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்

.

Related Posts