ரயில் மூலம் சென்னைக்கு இன்று முதல் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு இன்று முதல் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த 12-ஆம் தேதி முதல் சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு ரயிலில்25 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கொண்டுசெல்ல முடியும் என்ற நிலையில் இதுவரை சென்னைக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் ரயில்வே நிர்வாகம் சார்பில்2-வது ரயில்  இயக்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீரை கொண்டு செல்லும் வகையில் இன்னும் சில நாட்களில் மேலும் 2 ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts