ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விமல்குமார், சன்தீப் குப்தா, மொஹிந்தர் சிங் திலான் ஆகியோர் துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஹாக்கி வீரர் மெர்ஸ்பன் படேல், கபாடி வீரர் ரம்பீர் சிங் ககார், கிரிக்கெட் வீரர் சஞ்சய் பரத்வாஜ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, பாடி பில்டிங் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் மனோஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு தயான்சந்த் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

Related Posts