ரஷ்யாவில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அறைந்து கொள்ளும் போட்டிகள்

ரஷ்யாவில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அறைந்து கொள்ளும் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ரஷ்யா : மே-17

ரஷ்யாவின் வலிமையான மனிதர் என்பதற்கான போட்டிகள் மாஸ்கோவில் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்ற போட்டியாளர்கள் அவரவர் எடைக்கேற்ற வகையில் பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து மாறி மாறி கன்னத்தில் அறைந்தனர். இதில், வலி தாங்காமல் முகம் சுழித்தவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். கன்னங்கள் சிவக்க, முகமெல்லாம் வீங்கிப் போக நடந்த இந்தப் போட்டிகளை நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Related Posts