ரஷ்யா அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் இன்று முதல் 6-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அரசு மரியாதை வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது. ரஷ்ய ராணுவ வீரர்கள் வழங்கிய சிறப்பு அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். பின்னர் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விளாதிவோஸ்டாக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புதினுடன் பிரதமர் மோடி சென்றார். அதனை தொடர்ந்து ஸ்வெஸ்டா சொகுசு கப்பலில் அதிபர் புதனுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார். மேலும் கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள், வர்த்தக ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. விளாதிவோஸ்டாக் நகரில் நடக்கும் கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில், சிறப்பு அழைப்பாளராக மோடி பங்கேற்கிறார். 20வது இந்தியா-ரஷ்யா ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி-அதிபர் புடின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.  இந்த சந்திப்பின் போது எரிசக்தி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டு கூட்டு ஒத்துழைப்பின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் ஏ.கே.203 துப்பாக்கி உற்பத்தி செய்வது மற்றும் ரஷ்ய நிறுவனம், எச்ஏஎல் இணைந்து இந்தியாவில் 200 ஹெலிகாப்டர்களை தயாரிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் எனவும் தெரிகிறது.

Related Posts