ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திரமோடி

 

ரஷிய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து ரஷ்யாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். சோச்சி நகரில், பிரதமர் மோடியை ரஷ்ய அதிகாரிகள் வரவேற்றனர். 

ரஷிய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டார். ரஷியாவின் சோச்சி நகரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இன்று அவர் சந்தித்து பேசுகிறார்.  டெல்லியில் இருந்து விமானம் மூலம் சோச்சி நகர் சென்றடைந்த மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுவார்கள் என கூறப்படுகிறது.

Related Posts