ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை 

ரஷ்ய நாட்டின் விளாடிவோஸ்டாக் நகரின் ரஸ்கி தீவில் உள்ள ஈஸ்ட் ஃபெடரல் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்தும், அணு ஆயுதங்கள் குறித்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், கிம் ஜோங் உன் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புடினுடனான முதல் சந்திப்பு, மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதாக கிம் ஜோங் உன் தெரிவித்தார்.

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினை முற்றாக முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யா உதவும் என விளாடிமிர் புடின் உறுதி அளித்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் 2 மாதங்களுக்கு முன்பு, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Related Posts