ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி  வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல்காந்தி, அமேதிமக்களவைத் தொகுதியில்  நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அவர் 3கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ஊர்வலமாக சென்றார். அதில்  அவரது சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களது மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது சாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்கள்ராகுல் மீது மலர்களை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஊர்வலத்தின்போது ராகுலை கொல்ல முயற்சி நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில்மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி ஊர்வலத்திலும், செய்தியாளர் சந்திப்பின்போதும்  ராகுலை நோக்கி லேசர் கதிர்கள் வந்ததாகவும், பச்சை நிறத்தில் இருந்த  அந்த லேசர் கதிர்கள் அவரது தலையை குறி வைத்த்தாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தாகவும்,  நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த வி‌ஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. காங்கிரசின் இந்த புகார் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts