ராகுல் காந்திக்கு மத்திய அரசு கண்டனம்

ஐ.எஸ். உருவாக்கம் குறித்த ராகுல் காந்திக்கு பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

      ஜெர்மனியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹம்பர்க் நகரில் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், ‘வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும் என்று கூறினார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா போன்ற குழுக்களின் கொள்கைகளை ஏற்கனவே இந்தியா நிராகரித்து இருப்பதை சுட்டிக்காட்டினார். ஆனால், ராகுல் காந்தியின் அச்சுறுத்தலுக்கு பின்னால் இருக்கும் பொருளை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரான பிறகும், நாட்டில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை ராகுல் காந்தி இன்னும் புரிந்து கொள்ளவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts