ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியிலும்,  கேரளமாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். நேற்று  வயநாடு தொகுதியில்ராகுல்காந்தி  வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது திறந்த வாகனத்தில் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஊர்வலமாக கல்பேட்டாவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு  சென்று  வேட்புமனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து ராகுல், பிரியங்காவுடன் ஊர்வலமாக வந்து பிரசாரம் செய்தார். சாலையின் இரு ஓரங்களிலும் வெள்ளமென திரண்டிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர். அங்குலம், அங்குலமாகத்தான் ராகுலின் வாகனம் நகர்ந்தது. அப்போது, ராகுலுடன்  இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வருகிற 10-ந்தேதியும், அவரது தாயார் சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில்11ந்தேதியும்  வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts