ராகுல் காந்தி சென்ற தனி விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு: டெல்லிக்கு மீண்டும் திரும்பியது

பீகார் மாநிலம் பாட்னா, ஒடிசா மாநிலத்தில் பாலாசோர், மகாராஷ்டிராவின் சங்கம்நெர் ஆகிய மூன்று இடங்களில், ராகுல் காந்தி தேர்தல் இன்று பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள, ராகுல் காந்தி,  டெல்லியிலிருந்து தாம் சென்ற விமானத்தில், என்ஜின் கோளாறு ஏற்பட்டதாக இதையடுத்து, நடுவழியிலேயே விமானம் திருப்பிவிடப்பட்டதாகவும், தெரிவித்துள்ளார். இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, தாமதமாகவே, பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், எனவே, தொண்டர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துவதாவும், சுட்டுரைப் பதிவில் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts