ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்: செவிலியரை விசாரிக்க சிபிசிஐடி முடிவு

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், சேலத்தை சேர்ந்த உதவி செவிலியர் சாந்தி என்பவருக்கும் குழந்தை விற்பனையில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாந்தியை கைது செய்த போலீசார், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவர் 5 குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரை  காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

 

Related Posts