ராஜஸ்தானில் பெய்த கனமழைக்கு 12 பேர் பலி

ராஜஸ்தானில் திடீரென பெய்த கனமழையில் இரண்டு மாவட்டங்களில் 12 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் : ஏப்ரல்-12

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மற்றும் பரத்பூரில் திடீரென இடி மின்னலுடன் கனமைழை பெய்தது. திடீரென பெய்ய கன மழையால் சாலையெங்கும் மழை வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது. இந்த கனமழையால் தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆக்ரா – தோல்பூர் இடையிலான ரயில் போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Posts