ராஜஸ்தான்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ஜெய்ப்பூரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 25-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. 

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், அம்பத்தி ராயுடு மற்றும் டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்த்து. இதன்மூலம் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.

Related Posts