ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு அஷோக் கேலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு அஷோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததோ இல்லையோ, காங்கிரஸ் கட்சி யாரை முதலமைச்சராக அறிவிக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு வலுக்கத் தொடங்கியது.
முதலமைச்சர் இருக்கையை கைப்பற்றுவதில் சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் இருவரிடையே பலத்த போட்டி நிலவி வந்தது. இவர்களது ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைமையகம் முன்பு பரஸ்பரம் முழக்கம் எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சச்சினும் அஷோக்கும் நேற்று நேரில் சந்தித்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சராக அஷோக் கெலாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வாகியுள்ளார். இவர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.