ராஜினாமா எதற்கும் தீர்வாகாது: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி

 

 

ராஜினாமா செய்வது எதற்கும் தீர்வாகாது  என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளுனர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. ஆளுநர் கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று  நாராயணசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இது குறித்து புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் கிரண்பேடி, ராஜினாமா என்பது பதவிக்கு தானே தவிர, பணிக்கு அல்ல எனத் தெரிவித்தார். ராஜினாமா மட்டுமே தீர்வல்ல என்பதைப் புரிந்து கொண்டு, தம்முடன் இணைந்து செயல்பட வேண்டும் என கிரண்பேடி கேட்டுக்கொண்டார்.

Related Posts