ராஜிவ் கொலை வழக்கில்  7 பேரையும் தமிழக ஆளுநர் விடுதலை செய்யாதது வருத்தமளிக்கிறது: துரைமுருகன் 

வேலூரில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனின் பேபி மஹால் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  துரைமுருகன்,  ராஜுவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் விடுதலை செய்யாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

Related Posts