ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் பரோல் கோரி மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அகதியான தான், 1991 முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார். கைதுக்குப் பின், மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும், நெதர்லாந்தில் வசிக்கும் தனது மகன் தமிழ்கோ திருமண வயதை எட்டியதால், தந்தை என்ற முறையில் திருமண ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே 30 நாட்கள் பரோல் வழங்க சிறைத்துறை டி.ஐ.ஜி.-க்கு உத்தரவிடுமாறு கோரியுள்ள அவர், பரோல் வழங்கினால், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகரன் வீட்டில் தங்குவதாக தெரிவித்துள்ளார். விசாரணையின் போது மனு குறித்து விளக்கமளிக்க அரசுத் தரப்பில் 2 வார கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, 2 வாரங்களில் சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts