ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் 7 பேரையும் விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் 27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தங்களை விடுவிக்க வேண்டும் என்று  நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் கோர முடியாது என தமிழக அரசு கூறியது. மேலும், முன்கூட்டியே விடுதலை செய்ய ஆயுள் தண்டனை கைதிகள் உரிமை கோர முடியாது எனவும் தமிழக அரசு கூறியிருந்தது. இந்த சூழலில், நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

Related Posts