ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு நாள்: சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.  அவரது நினைவு நாளான இன்று, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான வீர் பூமியில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் மலர்தூவி அஞ்சலிசெலுத்தினர். இந்நிகழ்ச்சியில். முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், தொண்டர்களும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Posts