ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது  தவறான முன்னுதாரணமாக இருக்கும்: திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணம் என ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சொல்லியிருப்பதாகவும், இதுதான் தன்னுடைய கருத்தாகவும்  இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிகள் 7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது  தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்தாக இருக்கிறது என்றார்.

Related Posts