7 பேர் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சி

7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட 7 பேர் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 7 பேர் விடுதலைக்குபாஜகவைத் தவிர அனைத்து கட்சியினரும், அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த கோரிக்கையை வலுயுறுத்தி சிவகங்கையிலிருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி சென்னையில் நிறைவுற்றபோது தங்களை ஆளுநர் சந்திக்க மறுத்த்தாக தெரிவித்தார் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட 7 பேர் தினமும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், 7 பேரின் விடுதலை தள்ளிப் போவதால் பலரின் உழைப்பும் நேரமும் முடங்கியுள்ளது எனவும், 7 பேர் விடுதலையாகும் வரை போராடுபவர்களுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related Posts