ராஜீவ் காந்தி – தலைவர்கள் மரியாதை

டெல்லியில்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, குலாம் நபி ஆசாத், அசோக் கெலட் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் சென்னை கிண்டியை அடுத்த சின்னமலையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலைக்கு  தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய நாட்டை வல்லரசு நாடாக  மாற்றவும் இந்தியாவில் தொழில் புரட்சியோடு, முன்னேற்றமடைந்த நாடாக உருவக்கவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் ராஜீவ் காந்தி என புகழாரம் சூட்டினார். உலகத் தலைவர்கள் தலைவர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட்ட உன்னதமான தலைவர் ராஜிவ் காந்தி என்றும், தமிழகத்தில் ராஜீவ்காந்தி வழியில் காமராஜர் ஆட்சியை அமைக்க இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

 

Related Posts