ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்யின் 75 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபிஆசாத், பூபிந்தர் சிங் ஹூடா, அகமது படேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Posts