ராஜேந்திர பாலாஜி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மாணிக்தாகூர் பற்றி தரம் தாழ்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாணிக் தாகூர் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசியதாக அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மத்திய, மாநில அரசுப் பணிகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த திருநாவுக்கரசர், இதனை பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Posts