ராணுவத்தில் ஊழல் நடைபெறுகிறது என கூறுவது நாட்டின் பாதுகாப்பில் ஐயப்பாட்டை ஏற்படுத்தும்

ராணுவத்தில் ஊழல் நடைபெறுகிறது என கூறுவது நாட்டின் பாதுகாப்பில் ஐயப்பாட்டை ஏற்படுத்தும் என மக்களவை துணை தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

        கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட மலை கோவிலூர், சீத்தபட்டி, சீத்தபட்டி காலனி, மலையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறை கேட்பு மனுவை பெற்று கொண்ட மக்களவை துணைதலைவர் தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,  இந்திய எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு தொல்லை கொடுத்து கொண்டிப்பதாகவும், இது போன்ற நேரத்தில், ராணுவம் பலம் வாந்ததாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் ராணுவத்தில் ஊழல் என பொதுவாக கூறுவது நாட்டின் பாதுகாப்பில் ஐயப்பாட்டை ஏற்படுத்தும் எனவும், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்வதே நல்லது எனவும் கருத்து தெரிவித்தார்.

Related Posts