ராணுவ பயன்பாட்டிற்காக, 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு

பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி 4 ரிசாட் வகை செயற்கைகோள்களையும், கார்ட்டோசாட் 3 வகை செயற்கைகோள் ஒன்றையும் விண்ணில் செலுத்தவுள்ளது.

இந்த ரிசாட் வகை செயற்கை கோள்களால் அனுப்பப்பட்ட வரைபடங்களை வைத்தே பாலக்கோட்டில் தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அதிகரித்து வரும் சீனக் கடற்படை செயல்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு சார்ந்த செயற்கைகோள்களை அதிக அளவில் செலுத்த உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் ஜிசாட் வகை செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது

Related Posts