ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம்

இந்திய ராணுவத்தில், வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ராணுவத்தில் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். ராணுவத்தை நவீனப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து போரிடும் தன்மையையும், ஆயுதங்களையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேவைக்கு அதிகமான வீரர்கள் இருக்கும் படைப்பிரிவுகளில் இருந்து சுமார் 27 ஆயிரம் பேர் குறைக்கப்பட உள்ளனர். இதன்மூலம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மீதமாகும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Related Posts