ராமதாஸ்-க்கு பதிலடி கொடுத்த திமுக எம்.பி செந்தில்குமார்

திமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்.பியாக 4 பேர் உள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறிய மருத்துவர் ராமதாஸ் கூறியதற்கு தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், நீட் ஆள்மாறாட்ட புகாரில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு என்ற செய்தியை சுட்டிக்காட்டி, திமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்.பியான 4 பேர் எப்போது சிக்கப்போகிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அவரது ஸ்டைலிலேயே தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் பதில் அளித்துள்ளார். அதில், ஒரு எம்.பி கூட இல்லாத ஒரு கட்சி தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு எம்.பியை அனுப்பியதாக தகவல், அது குறித்து விசாரித்து மக்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும் என்றும்  அவர் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பியாக உள்ளதை செந்தில்குமார் மறைமுகமாக சுட்டிக்காட்டி ராமதாசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Related Posts