ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது

Want create site? Find Free WordPress Themes and plugins.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

மண்டபத்தையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடலில் ரயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் பாம்பன் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts