ராம்ஜெத் மலானியின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தி சாதுர்யம் மிக்க புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரை நாடு இழந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டடுள்ள டுவிட்டர் செய்தியில், அவசர நிலை காலத்தில், பொது சுதந்திரத்திற்கான அவரது துணிச்சல், போராட்டம் என்றும் நினைவில் கொள்ளப்படும் என பதிவிட்டுள்ளார்.  டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராம்ஜெத்மலானி உடலுக்கு குடியரசு துணை  தலைவர் வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

சட்ட அறிவுக்கூர்மை கொண்ட மூத்த வழக்கறிஞர், கருத்துரிமையை நிலைநாட்டுவதில் தனித்துவ ஆர்வமும், வேகமும் கொண்டவர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Posts