ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த் இன்று 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், குடியரசுத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “குடியரசுத் தலைவரின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துகள், கொள்கை விஷயங்களைப் பற்றிய அவரது நுண்ணறிவு மற்றும் புரிதலிலிருந்து இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது என பதிவிட்டுள்ளார். ஏழைகளையும் நலிவுற்றோரையும் மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts