ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கழுத்து அறுத்து கொலை

தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த 2005ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் ஆத்திபழம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக சிவகுமார் காரில் தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது அவரது கார் தென்பாகம் காவல்நிலையம் அருகே சென்ற போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பிஓடியது. குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Posts