ரூ.300 கோடி நஷ்டத்தில் சிக்கியுள்ள ஆவின் நிறுவனம்

ஆவின் நிறுவனம் 300 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது.

கடந்த 2016-2017-ம் நிதியாண்டில் ஆவின் நிறுவனம் 139 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியதாக குறிப்பிடும் அவர்கள், அடுத்தடுத்த நிதியாண்டுகளில் சரிவை சந்தித்தது ஏன் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். லஞ்சம் ஊழல் ஆகியவையே நஷ்டத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டும் பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள், ஆவின் நிர்வாக இயக்குநர், பால்வளத்துறை அமைச்சர், மற்றும் செயலாளரை பதவிநீக்க செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்கு  உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆவின் மொத்த விநியோகஸ்தர்களிடம், லிட்டருக்கு 50 பைசா வரை அதிகாரிகள் மிரட்டி லஞ்சம் வாங்குவதாக புகார் கூறும் அவர்கள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்களை நியமிக்கும் அரசின் திட்டம் ஆவினை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்றும் தெரிவிக்கின்றனர்.

Related Posts