ரெட் அலர்ட் : முதலமைச்சர் பழனிசாமி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள ரெட் அலர்ட் குறித்து, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 24 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையிலிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். வடகிழக்குப் பருவமழையின் போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி கண்டறியப்பட்டுள்ள, பாதிக்கப்படக்கூடிய இடங்கள், மிகவும் பாதிக்க கூடிய இடங்களில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், காவல்துறை இயக்குனர் டிகே. ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Posts