ரெட் அலர்ட் வாபஸ்

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனப்படும் அதிகன மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் குமரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளதாகவும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும் எனவும் அவர் தெரிவித்தார். புயல் சின்னம் ஓமன் வளைகுடாவுக்கு நகர்வதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாக அவர் கூறினார். மேலும் அக்டோபர் 8-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் எனவும் குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு கடல்பகுதிக்கும், மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல்பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.. கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 12 சென்டி மீட்டரும், விழுப்புரத்தில் 2புள்ளி12 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts